Educational news about Personality development, career guidance, Leadership Skills and more in Edubilla.com ...

 

அரசு பொது இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள்

Updated On 2015-04-13 11:35:27 Exclusive
15/66/tamilnadu-govt.png
 

தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்களை அரசு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியிருப்பது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எல்காட் மூலமாகவும், 8 வட்ட அலுவலகங்கள், அந்தந்த கிராமங்களில் உள்ள 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், 62 புது வாழ்வு திட்ட அலுவலகங்களிலும் அரசு பொது இ சேவை மையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

தமிழக முதல்வாõன் உத்தரவுபடி 6-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்களை தங்களுக்கு அருகிலுள்ள அரசு பொது இ சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

ஏனெனில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த சான்றிதழ்களை பெற வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு பொது இ சேவை மையங்களுக்கு மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் காலதாமதம் ஏற்படும் என்பதற்காக இந்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

source-www.dinamani.com

 
 

Post Your Comments for this News

 
 
 
Note*:
If you are a new member, choose new password for your account (or) use your existing account's password to login and send message
Captcha Text
 
 

Related Exclusive News

Top