Educational news about Personality development, career guidance, Leadership Skills and more in Edubilla.com ...

 

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்

Updated On 2016-03-11 09:37:42 Education
06/c4/16-a-a-a-a-a-a-a-a-ya-a-ya-a-a-a-a-a-sa-a-a-a-a-a-a-a-a-a-ua-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-.jpg
 
Author : S.Manikandaprabhu
 
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,' ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு,

அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் 2009ல் அமலானது. அப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிலை கல்வித்திட்டம் போன்றவற்றில் மத்திய அரசின் 75 சதவீத நிதி, மாநில அரசின் 25 சதவீத நிதியுடன் ஆசிரியர்களுக்கான சலுகைகள், 700 தலைமை ஆசிரியர்கள் நியமனம், பள்ளிக் கட்டடங்களை அமைப்பது போன்ற பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டது.இந்நிலையில் மாநில அரசு கடந்த 2011 ஜன., 15ல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிட்டது. அதில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் தேர்வாகியிருக்க வேண்டும்.

அல்லது அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 'டி.இ.டி.,' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2016 நவ., 15ல் இந்த அரசாணை வெளியிடப்பட்டு ஐந்தாண்டு நிறைவடைகிறது. இதனால், தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது: இன்னும் 9 மாதங்களில் அரசு அறிவித்த 5 ஆண்டு காலம் முடிவடையும் நிலையில் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியாக உள்ளது. அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டும், என்றார்.
Source Link : http://alleducationnewsonline.blogspot.in/2016/02/16.html

Image Source : https://tamilah.files.wordpress.com/2009/04/teacher-student.jpg
 
 

Post Your Comments for this News

 
 
 
Note*:
If you are a new member, choose new password for your account (or) use your existing account's password to login and send message
Captcha Text
 
 

Related Education News

Top