தமிழ் இலக்கியம்

திருக்குறள் - திருவள்ளுவர்

திருக்குறள் தமிழ் அறநூல்களின் முடிசூடா மன்னனாக திகழ்கிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறள் உலகபொதுமறை, வாயுறைவாழ்த்து, முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி, தமிழ் மறை, திருவள்ளுவம் என்றும் பல பெயர் கொண்டு விளங்குகிறது. திருக்குறள் ஒரு ஈடு இனையற்ற வாழ்வியல் நூல்.

பெயர் காரணம்

குறள் வெண்பாவால் ஆன நூல் இது என்பதால் அதன் ஆகுபெயராக குறள் என்னும் பெயரும், அதன் மீது நாம் கொண்ட சிறப்பு நோக்கி திரு என்று அடைமொழி கொண்டு திருக்குறள் என்று அழைக்கபடுகிறது. "அறம், பொருள், இன்பம்",ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது.

திருக்குறளின்..

More Details View திருக்குறள் Onbook
 

ஆத்திசூடி - ஒளவையார்

ஆத்திச்சூடி எளிமையான வரிகளைக் கொண்டு அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இயற்றப்பட்ட நீதிநூல் ஆகும். ஆத்திச்சூடியை இயற்றியவர் ஔவையார். ஆத்திச்சூடி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும். ஆத்திச்சூடி உயிர் வருக்கம், உயிர்மெய் வருக்கம், ககர வருக்கம், சகர வருக்கம், தகர வருக்கம், நகர வருக்கம், பகர வருக்கம், மகர வருக்கம், வகர வருக்கம் என பிரித்து தொகுக்கலாம். ஆத்திச்சூடியில் 109 பாடல்களும், ஒரு கடவுள் வாழ்த்தும் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகள் எளிதில் புரிந்து மனதில் பதியவைக்க வேண்டிய அறநூல் இது.

Edubilla.com, நம் வருங்கால சந்ததிகளின் நலனுக்காக ஆத்திச்சூடியின்..

More Details View ஆத்திசூடி Onbook
 

புதிய ஆத்திசூடி - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பல புரட்சிகரமான கருத்துக்களை தமது பாடல்களின் மூலம் எடுத்துரைப்பதில் வல்லவர். ஔவையார் இயற்றிய ஆத்திச்சூடியை போன்றே பாடல் அமைப்புடன் பல புதிய சிந்தனைககளை கொண்டு புதிய ஆத்திச்சூடியை இருபதாம் நூற்றாண்டில் இயற்றினார். புதிய ஆத்திச்சூடியில் 109 பாடல்களும்,ஒரு கடவுள் வாழ்த்தும் அடங்கும்.

அதில் “வேதம் புதுமைசெய்”, ”தாழ்ந்து நடவேல்”, “போர்த்தொழில் பழகு” போன்ற புரட்சிகரமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

காலத்தால் அழியா மகாகவியின் புதிய ஆத்திச்சூடியை உலக மக்கள் அனைவரும் அறிய நமது edubilla.com இணையதளத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தொகுத்து..

More Details View புதிய ஆத்திசூடி Onbook
 

கொன்றை வேந்தன் - ஒளவையார்

ஔவையார் இயற்றிய நீதிநூல்களுள் ஒன்று கொன்றை வேந்தன். கொன்றை மலர் விரும்பி அணியும் சிவபெருமானின் மகனாகிய முருகப்பெருமானை போற்றிப் பாடப்பட்டுள்ள நூல் இதுவாகும்.

இந்நூல் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”, ஆலயம் தொழுவது சாலவும் நன்று”, போன்ற மிக உயரிய வாழ்வியல் கோட்பாடுகளை எடுத்துரைக்கிறது.

படிக்கப்படிக்கத் திகட்டாத இந்நூலின் சுவைகுன்றாத இப்பாடல்களும் அதன் ஆங்கில மொழியாக்கமும் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

More Details View கொன்றை வேந்தன் Onbook
 

நல்வழி - ஒளவையார்

இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்வழிகளையும் உரைப்பதால் இந்நூல் நல்வழி என அழைக்கபடுகிறது. நல்வழி ஔவையாரால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.

மானிடர் அனைவரும் நல்வழி செல்ல நல்வழிப் பாடல்கள் இங்கு பொருள்,மற்றும் மொழிபெயர்ப்புடன் தொகுக்கப்பட்டுள்ளது.

More Details View நல்வழி Onbook
 

மூதுரை - ஒளவையார்

மிகப்பழமை வாய்ந்த அறக்கருத்துக்களை கொண்ட நூல் ஆதலின் இந்நூல் மூதுரை என பெயர்பெற்றது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப்பாடல் வாக்குண்டாம் எனத்தொடங்குவதால் இப்பெயர் பெற்றது.

இந்நூலில் முப்பது பாடல்கள் உள்ளது. ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு கருத்தை கொண்டிருக்கும். இப்பாடல்களை இயற்றியவர் ஔவையார் ஆவார்.

அறக்கருத்துக்களின் படி நம் வாழ்வை வகுத்துக்கொள்ள, மூதுரை பாடல்கள் மற்றும் அதன் விளக்கம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

More Details View மூதுரை Onbook
 

உலகநீதி - உலகநாதர்

உலகநீதி பதினெட்டாம் நூற்றாண்டில் உலகநாத பண்டிதரால் இயற்றப்பட்ட நூல் ஆகும். இந்நூல் நீதிநூல் வகையை சார்ந்தாகும்.

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்….”

போன்ற இதன் பாடல்கள் இவற்றை எல்லாம் செய்யவேண்டாம் என்று எதிர்மறையாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடல்களின் முடிவிலும் முருகப்பெருமானை வாழ்த்தி முடிகிறது. இப்பாடலை இயற்றிய உலகநாதர் முருகபக்தர் ஆவார். இப்பாடல்களின் சிறப்பு கருதி, அனைத்து பாடல்களையும் விளக்கத்துடன் மொழிபெயர்த்து வழங்கியுள்ளோம்.

More Details View உலகநீதி Onbook
 

வெற்றிவேற்கை - அதிவீர ராம பாண்டியர்

வெற்றிவேற்கை தமிழ் நீதிநூல்களில் ஒன்று. வெற்றிவேற்கை பதினாராம் நூற்றாண்டு அதிவீரராம பாண்டியர் என்னும் பிற்கால பாண்டிய மன்னனால் இயற்றப்பட்டது. வெற்றிவேற்கை பல நல்ல நீதி நெறிகளை எடுத்துரைக்கின்றது. அதிவீரராம பாண்டியர் இறைபக்தி மிகுதியானவர். இவர் தென்காசியில் சிவன் கோவில் ஒன்றும், விஷ்ணு கோவில் ஒன்றும் கட்டியுள்ளார்.இவரை சீவலமாறன் என்றும் அழைப்பர்.

வெற்றிவேற்கை பாடல்கள் பொருள் மற்றும் மொழிபெயர்ப்புடன் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

More Details View வெற்றிவேற்கை Onbook
 

பாரதியார் கவிதைகள் - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

சுப்பிரமணிய பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன்.இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் திசம்பர் 11 1882ல் சின்னச்சாமி ஐயர் இலக்குமி அம்மையார் தம்பதியின் மகனாய் பிறந்தார்.சிறுவயது முதலே கவிப்புலமை பெற்று விளங்கியவர் பாரதியார்.இவர் ஒரு எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாசிரியர்,சுதந்திர போராட்டவீரர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டவர்.இவரது பாடல்களில் பெண் விடுதலை, நாட்டுபற்று, மற்றும் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் மேலோங்கி இருக்கும்.இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும்..

More Details
 

தமிழ் பழமொழிகள்

நீண்டநெடுங்காலமாய் நமது முன்னோர்கள் தங்களது அனுபவக்குறிப்புகளை சூழலுக்கு ஏற்றார் போல வெளிபடுத்த பயன்படுத்திவரும் சொற்தொடர்களே பழமொழி எனப்படும். இதன் முலம் பல அறிவுரைகள் வழங்கப்படும்.

இவை பாமரமக்கள் புரிந்துகொள்ளும்படி மிக எளிமையாக அமைந்திருக்கும். அவற்றுள் பல பழமொழிகளை விளக்கத்துடன் தொகுத்து வழங்கியுள்ளோம்.

More Details
 
 
Top