ஒளவையார் அருளிச்செய்த ஆத்திசூடி

ஆத்திச்சூடி/Aathichudi

உயிர் வருக்கம்/Uyir Varukkam

அறம் செய விரும்பு

1  அறம் செய விரும்பு

விளக்கம்
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

Transliteration
Aram seya virumbu

English Translation
Intend to do right deeds

ஆறுவது சினம்

2  ஆறுவது சினம்

விளக்கம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

Transliteration
Aaruvadhu Sinam

English Translation
Anger will be cooled off

இயல்வது கரவேல்

3  இயல்வது கரவேல்

விளக்கம்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

Transliteration
Iyalvadhu Karavael

English Translation
Aid to your capacity

ஈவது விலக்கேல்

4  ஈவது விலக்கேல்

விளக்கம்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

Transliteration
Eevadhu Vilakkael

English Translation
Never stop aiding

உடையது விளம்பேல்

5  உடையது விளம்பேல்

விளக்கம்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

Transliteration
Udaiyadhu Vilambael

English Translation
Never boast your possession

ஊக்கமது கைவிடேல்

6  ஊக்கமது கைவிடேல்

விளக்கம்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

Transliteration
Ookkamadhu Kaividael

English Translation
Never give up enthusiasm

எண் எழுத்து இகழேல்

7  எண் எழுத்து இகழேல்

விளக்கம்
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

Transliteration
Enn Ezhuthu Egazhael

English Translation
Never degrade learning

ஏற்பது இகழ்ச்சி

8  ஏற்பது இகழ்ச்சி

விளக்கம்
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

Transliteration
Yaerpadhu Igazhchi

English Translation
Accepting alms is ashamed

ஐயம் இட்டு உண்

9  ஐயம் இட்டு உண்

விளக்கம்
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.

Transliteration
Ayyamittu Unn

English Translation
Share with the needy before you eat

ஒப்புரவு ஒழுகு

10  ஒப்புரவு ஒழுகு

விளக்கம்
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

Transliteration
Oppuravu Ozhugu

English Translation
Act virtuous

ஓதுவது ஒழியேல்

11  ஓதுவது ஒழியேல்

விளக்கம்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

Transliteration
Odhuvadhu Ozhiyael

English Translation
Never fail learning

ஔவியம் பேசேல்

12  ஔவியம் பேசேல்

விளக்கம்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

Transliteration
Ouviyyam Paesael

English Translation
Never gossip

அஃகஞ் சுருக்கேல்

13  அஃகஞ் சுருக்கேல்

விளக்கம்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

Transliteration
Akkam Surukael

English Translation
Never compromise in food grains

 
Top