99 வல்லமை பேசேல்
விளக்கம்
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே
Transliteration
Vallamai Pesel
English Translation
Don't self-praise.
100 வாதுமுற் கூறேல்
விளக்கம்
பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே
Transliteration
Vaathu Murkooral
English Translation
Don't gossip or spread rumor.
101 வித்தை விரும்பு
விளக்கம்
கல்வியாகிய நற்பொருளை விரும்பு
Transliteration
Vithai Virumbu
English Translation
Long to learn.
102 வீடு பெறநில்
விளக்கம்
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
Transliteration
Veedu Pera Nil
English Translation
Work for a peaceful life.
103 உத்தமனாய் இரு
விளக்கம்
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
Transliteration
Uthanamai Iru
English Translation
Lead exemplary life.
104 ஊருடன் கூடிவாழ்
விளக்கம்
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
Transliteration
Oorudan Koodi Vazh
English Translation
Live amicably.
105 வெட்டெனப் பேசேல்
விளக்கம்
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே
Transliteration
Vettena Pesel
English Translation
Don't be harsh with words and deeds.
106 வேண்டி வினைசெயேல்
விளக்கம்
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
Transliteration
Vendi Vinai Seyel
English Translation
Don't premeditate harm.
107 வைகறை துயிலெழு
விளக்கம்
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
Transliteration
Vaigarai Thuyil Ezhu
English Translation
Be an early-riser.
108 ஒன்னாரைத் தேறேல்
விளக்கம்
பகைவர்களை நம்பாதே
Transliteration
Onnaarai Thaerael
English Translation
Never join your enemy.
109 ஓரஞ் சொல்லேல்
விளக்கம்
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
Transliteration
Oram Sollael
English Translation
Be impartial in judgement.