பாரதியார் கவிதைகள்/Bharathiyar Kavithaigal

சுப்பிரமணிய பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன்.இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் திசம்பர் 11 1882ல் சின்னச்சாமி ஐயர் இலக்குமி அம்மையார் தம்பதியின் மகனாய் பிறந்தார்.சிறுவயது முதலே கவிப்புலமை பெற்று விளங்கியவர் பாரதியார்.இவர் ஒரு எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாசிரியர்,சுதந்திர போராட்டவீரர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டவர்.இவரது பாடல்களில் பெண் விடுதலை, நாட்டுபற்று, மற்றும் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் மேலோங்கி இருக்கும்.இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய எழுச்சியூட்டும் பாடல்களைப் பாடி, விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டியவர் பாரதியார் எனவே இவரை தேசிய கவி என அழைப்பர். பாரதியாரின் கவிதைகளை அனைவரும் படித்துப் பயன்பெற இங்கே அந்த மகாகவியின் படைப்புக்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

 

கவிதைகள்/Kavithaigal

 
Top