75 மந்திரம் வலிமை
விளக்கம்
திரும்ப திரும்ப சொல்வதினால் எந்த வார்த்தைக்கும் வலிமை கூடும். (எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் என்பது போல) (அது போல உன் லட்சியங்களை திரும்ப திரும்ப நினைத்து செயல் பட்டால்..வெற்றி நிச்சயம்.)
Transliteration
Mandhiram valimai.
English Translation
Practice makes perfect.
76 மானம் போற்று
விளக்கம்
எக்காலத்திலும், எந்த காரணதிற்காகவும், தன்மானத்தை விடாதே.
Transliteration
Maanam potru.
English Translation
Do not lose your self-respect, at any cost.
77 மிடிமையில் அழிந்திடேல்
விளக்கம்
உன் வாழ்க்கையை வறுமையிலும், துன்பத்திலும் இழந்து விடாதே.
Transliteration
Midimaiyil azhindhidel.
English Translation
Do not waste/destroy your life in povery and suffering.
78 மீளுமாறு உணர்ந்து கொள்
விளக்கம்
மனச் சோர்விலே அமிழ்ந்து போகாமல், அந்த நிலையிலிருந்து மீண்டு வெளியே வா.
Transliteration
Meelumaaru unarndhu kol.
English Translation
Realise and get out of any adverse situation (as soon as possible)
79 முனையிலே முகத்து நில்
விளக்கம்
துணிவோடு முன்னே இரு.
Transliteration
Munaiyile mugaththu nil.
English Translation
Be bold.
80 மூப்பினுக்கு இடம் கொடேல்
விளக்கம்
வயதாவதைப் பற்றி எண்ணாதே. இந்த எண்ணமே சீக்கிரமே முதுமையை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
Transliteration
Mooppinukku idam kodel.
English Translation
Do not even think about getting old..the very thought brings old age faster than you think.
81 மெல்லத் தெரிந்து சொல்
விளக்கம்
( ஒரு விஷயத்தை) ஆராய்ந்து தெரிந்து பேசு.
Transliteration
Mella therindhu sol.
English Translation
Think before you speak.
82 மேழி போற்று
விளக்கம்
ஏரைப் போற்று..விவசாயத்தை மதித்து வாழ்.
Transliteration
Mezhi potru.
English Translation
Protect the plough. Do not forget the importance of agriculture.
83 மொய்ம்புறத் தவம் செய்
விளக்கம்
மன)வலிமையோடு எப்போதும் இருக்க பழகு.
Transliteration
Moimpura thavam sei.
English Translation
Train yourselves to have a strong mind.
84 மோனம் போற்று
விளக்கம்
இடம் அறிந்து மௌனம் கடைபிடி.
Transliteration
Monam potru.
English Translation
Silence is best where it is required.
85 மௌட்டியந் தனைக் கொல்
விளக்கம்
(உன் அறிவால்) அறியாமையை ஒழி.
Transliteration
Mounttiyan thanai kol.
English Translation
(With knowledge as light) Kill you ignorance.
86 யவனர் போல் முயற்சி கொள்.
விளக்கம்
யவனர்கள் பொதுவாக எகிப்தியர்கள் என்ற கருத்து உண்டு. இந்த கருத்து உண்மை அல்ல என்ற கருத்தும் உண்டு.ஆதலால், யவனர்கள் ஊக்கமுடனும், பிரயத்தனப்பட்டும் வேலைகளை செய்வார்கள் எனத் தெரிகிறது.அதனால், யாவனர்களைப் போல் முயற்சி செய் என்று கொள்ளலாம்.
Transliteration
Yavanar pol muyarchi kol.
English Translation
There is difference of opinion about who Yavanas are. Some say they are Egyptians some say they are not.Whatsoever, it seems they are very diligent people.Let us be like them.
87 யாவரையும் மதித்து வாழ்.
விளக்கம்
எல்லா உயிரினிடத்தும் அன்பும் மதிப்போடும் இரு. வேற்றுமை பாராதே.
Transliteration
Yaavaraiyum madhithu vaazh.
English Translation
Respect all.
88 யௌவனம் காத்தல் செய்.
விளக்கம்
எப்போதும் இளமையாக, துடிப்பாக, சுறுசுறுப்பாக இரு. இந்த குணங்கள் குறையாமல் பார்த்துக் கொள்.
Transliteration
Yavvanam kaathal sei.
English Translation
Being active is one of the characteristiscs of being young..do not lose it.
89 ரஸத்திலே தேர்ச்சிகொள்
விளக்கம்
மனக்கிளர்ச்சியில் இருந்து தெளிவடைந்து கொள்.
Transliteration
Rasaththile thaerchi kol.
English Translation
Get to know the reason and be out of your sentiments.
90 ராஜஸம் பயில்
விளக்கம்
உனக்கு அதிகமாக பிடித்த செயலை பயில், தேர்ச்சி கொள்.
Transliteration
Raajasam payil.
English Translation
Practice your passion. Go for it.
91 ரீதி தவறேல்
விளக்கம்
ஒரே மாதிரியாக இரு..நிலை தவறாதே.
Transliteration
Reethi thavarel.
English Translation
Do not change your (good) style inspite of events which might alter it.
92 ருசி பல வென்று உணர்
விளக்கம்
ஐம்புலன்களின் ருசியினை அடக்கி வெல்.
Transliteration
Ruchi pala vendru unar.
English Translation
Win over the tastes of five senses.
93 ரூபம் செம்மை செய்
விளக்கம்
உன்னுடைய உண்மையான குணத்தை இன்னும் உயர்வாக இருக்க செம்மை படுத்திக் கொள்.
Transliteration
Roopam semmai sei.
English Translation
Improve your good qualities.
94 ரேகையில் கனி கொள்
விளக்கம்
ரேகை என்பது ஒரு கொடு தானே..அதுவும் சில நேரங்களில் அநீதி இழைக்க, நியாயத்திற்கு பாடுபட, நம் (நியாயமான) முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் என்றால், அந்த கோட்டின் மீது கோவம் கொள்...வெளியே வா.
Transliteration
Raegaiyil kani kol.
English Translation
Get angry and get out of that line, which prevents us doing good deeds and also gives way ( to others) to do bad deeds.
95 ரோதனம் தவிர்
விளக்கம்
அழுகையை நீக்கு.
Transliteration
Rodhanam thavir.
English Translation
Keep away from weeping tears.
96 ரௌத்ரம் பழகு
விளக்கம்
கோவத்தை அடக்கி ஆள். எப்பொழுது கோவிக்கலாம், எப்பொழுது அதனை வெளிகாட்டாமல் இருக்கலாம் என்று தெரிந்து கொள்.
Transliteration
Roudhram pazhagu.
English Translation
Practise your anger, which means, know how to show it at the appropriate time and also to control it, when unnecessary.
97 லவம் பல வெள்ளமாம்
விளக்கம்
சிறுதுளி பெருவெள்ளம்.
Transliteration
Lavam pala vellamaam.
English Translation
Small drops make a mighty ocean.
98 லாவகம் பயிற்சி செய்
விளக்கம்
பழக்கமே தேர்ச்சியை கொடுக்கும்.
Transliteration
Laavagam payirchi sei.
English Translation
Pratice makes perfect.
99 லீலை இவ்வுலகு
விளக்கம்
உலகம் ஒரு விளையாட்டு களம்.
Transliteration
Leelai ivvulagu.
English Translation
This world is a playground.
100 (உ)லுத்தரை இகழ்
விளக்கம்
உலோபி -- கருமியை நிந்தை செய்..
Transliteration
Lutharai igazh.
English Translation
Reproach the miser.
101 (உ)லோகநூல் கற்றுணர்
விளக்கம்
உலகை தெரிந்து புரிந்து கொள்.
Transliteration
Loganool katrunar.
English Translation
Know this world and understand it.
102 லௌகிகம் ஆற்று
விளக்கம்
உலக நியதிகளையும்/ கடமைகளையும் பின்பற்று/ செய்.
Transliteration
Lougigam aatru.
English Translation
Do your worldly duties and follow the law of the world.
103 வருவதை மகிழ்ந்துண்
விளக்கம்
இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்.
Transliteration
Varuvadhai magizhndhu un.
English Translation
Be content with what you have.
104 வான நூல் பயிற்சி கொள்
விளக்கம்
ஆகாய கோளங்களைப் பற்றி தெரிந்து கொள்.
Transliteration
Vaana nool payirchi kol.
English Translation
Know astronomy ( get to know about nature)
105 விதையினைத் தெரிந்து இடு
விளக்கம்
விதையினை, அதன் பருவ காலங்களுக்கு ஏற்ப பயிரிடு.
Transliteration
Vidhaiyinai therindhu idu.
English Translation
Sow the seed at the appropriate time.
106 வீரியம் பெருக்கு
விளக்கம்
வலிமை மற்றும் வீரத்தைப் பெருக்கு.
Transliteration
Veeriyam perukku.
English Translation
Strengthen yourself. Be brave.
107 வெடிப்புறப் பேசு
விளக்கம்
தைரியமாக பேசு. ஒளிவு மறைவு இல்லாமல் பேசு.
Transliteration
Vedippura pesu.
English Translation
Talk straightforward.
108 வேதம் புதுமை செய்
விளக்கம்
புதிய நல்ல நெறிகளை உருவாக்கு, பின்பற்று.
Transliteration
Vedham pudhumai sei.
English Translation
Regulate new rules and follow the same.
109 வையத் தலைமை கொள்
விளக்கம்
உலகத்திற்கே, தைரியமான, எதற்கும் அஞ்சாத, நெறி தவறாத, வீரமான தலைவனாக இரு. (உலகத்தோர் போற்றும் படி வாழ்)
Transliteration
Vaiya thalamai kol.
English Translation
Be an ideal leader.
110 வௌவுதல் நீக்கு
விளக்கம்
திருடாதே, மற்றவரின் பொருளுக்கு ஆசைப் படாதே.
Transliteration
Vavudhal neekku.
English Translation
Do not snatch or steal other's properties or rights.