மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறிவுரைகளுடன் புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி/Puthiya Aathichudi

சகர வருக்கம்/Sagara Varukkam

25  சரித்திர தேர்ச்சி கொள்

விளக்கம்
நாட்டின் சரித்திரத்தையும், பெரியோரின் சரிதையும் தெரிந்து கொள்.

Transliteration
Charithira therchi kol.

English Translation
Get to know the history of places and biographies of great people.

26  சாவதற்கு அஞ்சேல்

விளக்கம்
பேய்க்கும் மரணத்திற்கும் அஞ்சாதே.

Transliteration
Saavadharkku anjel.

English Translation
Do not be afraid of ghosts/death.

27  சிதையா நெஞ்சுகொள்

விளக்கம்
நெஞ்சில் உறுதியோடு இரு.

Transliteration
Sidhaiya nenju kol.

English Translation
Have a strong mind and don't let it shatter.

28  சீறுவோர்ச் சீறு

விளக்கம்
பெரும் கோபம் கொண்டு உயிர்களை துன்புறுத்துவோரைப் பார்த்து சும்மா இராதே.

Transliteration
Seeruvor seeru.

English Translation
Get angry on those who hurt other beings through their uncontrolled anger. (take action)

29  சுமையினுக்கு இளைத்திடேல்

விளக்கம்
பொறுப்பினைக் கண்டு ஓடாதே.

Transliteration
Sumaiyinukku ilaithidel.

English Translation
Do not run away from your responsibilites.

30  சூரரைப் போற்று

விளக்கம்
சூரியனைப் போற்று.

Transliteration
Soorarai potru.

English Translation
Praise the Sun God.

31  செய்வது துணிந்து செய்

விளக்கம்
(நல்லவற்றை) செய்ய பயப்படாதே.

Transliteration
Seivadhu thunindhu sei.

English Translation
Be brave while doing good things.

32  சேர்க்கை அழியேல்

விளக்கம்
(நல்லனவற்றின்) சேர்க்கையை அழித்துவிடாதே.

Transliteration
Serkkai azhiyel.

English Translation
Do not destroy good unions.

33  சைகையிற் பொருள் உணர்

விளக்கம்
சைகை உணர்த்தும் பொருளை பொருளை தெரிந்து கொள்.

Transliteration
Saikaiyil porul unar.

English Translation
Learn what is behind (some) signals and gestures.

34  சொல்வது தெளிந்து சொல்

விளக்கம்
சொல்லவந்ததை குழப்பாமல் சொல். உன் கருத்தில் தெளிவாய் இரு.

Transliteration
Solvadhu thelindhu sol.

English Translation
Be clear in your usage of words and opinions.

35  சோதிடம் தனை இகழ்

விளக்கம்
நிமித்த சாஸ்திரத்தை இகழ்.

Transliteration
Sothidam thanai igazh.

English Translation
Despise the science of omens.

36  சௌரியந் தவறேல்

விளக்கம்
வீரத்தைத் தவற விடாதே. வீரத்தை விட்டு விடாதே.

Transliteration
Sowriyan thavarel.

English Translation
Do not let your valour be lost.

37  ஞமிலி போல் வாழேல்

விளக்கம்
நாயைப் போல் வாழாதே (அடிமையாக இராதே)

Transliteration
Gnamili pol vaazhel.

English Translation
Don't be like a dog, which means don't be a slave.

38  ஞாயிறு போற்று

விளக்கம்
சூரியனை துதி செய்.

Transliteration
Gnaayiru potru.

English Translation
Worship, praise the Sun God.

39  ஞிமிரென இன்புறு

விளக்கம்
நிமிர்ந்து(முதுகெலும்போடு) வாழ்.தீயவைக்குத் தாழ்ந்து போகாதே.

Transliteration
Gnimirena inbhuru.

English Translation
Stand erect, have a backbone ( to fight against any atrocities)

40  ஞெகிழ்வத தருளின்

விளக்கம்
(ஒருவரது) முகம், அல்லது வாழ்க்கையை மலர்தல் செய். உதவி செய்.

Transliteration
Gneghizhva dharulin.

English Translation
Make others happy by being helpful.

41  ஞேயங் காத்தல் செய்

விளக்கம்
அறியப்படும் பொருளையும், இறைவனையும், நட்பையும் இழக்காதே.

Transliteration
Gneyang kaaththal sei.

English Translation
Protect, (don't lose) your object of knowledge, God and friendship.

 
Top