திருக்குறள் தமிழ் அறநூல்களின் முடிசூடா மன்னனாக திகழ்கிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறள் உலகபொதுமறை, வாயுறைவாழ்த்து, முப்பால், தெய்வநூல்,பொய்யாமொழி, தமிழ் மறை, திருவள்ளுவம் என்றும் பல பெயர் கொண்டு விளங்குகிறது. திருக்குறள் ஒரு ஈடு இனையற்ற வாழ்வியல் நூல்.
பெயர் காரணம்
குறள் வெண்பாவால் ஆன நூல் இது என்பதால் அதன் ஆகுபெயராக குறள் என்னும் பெயரும், அதன் மீது நாம் கொண்ட சிறப்பு நோக்கி திரு என்று அடைமொழி கொண்டு திருக்குறள் என்று அழைக்கபடுகிறது. "அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது.
திருக்குறளின் அமைப்பு
திருக்குறளில் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன அவை பால் எனப்படும்.அவை அறத்துப்பால், பொருட்பால், மற்றும் காமத்துப்பால் ஆகும். பாலின் உட்பிரிவாக இயல் விளங்குகிறது. திருக்குறளில் பாயிர இயல்இல்லற இயல், துறவற இயல், ஊழ் இயல், அரசியல், அங்க இயல், ஒழிபியல், களவு இயல், கற்பு இயல் ஆகிய இயல்கள் உள்ளன. இயல்களின் உட்பிரிவுகளாக அதிகாரங்கள் உள்ளன. திருக்குறளில் 133 அதிகாரங்களும் அதிகாரத்திருக்கு பத்தாக 1330 குறட்பாக்களும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் குறிப்பு
திருவள்ளுவர் வரலாறு மற்றும் வாழ்ந்த காலம் குறித்த ஒருமித்த கருத்து இல்லை. திருக்குறளில் வெளிப்படும் சில பண்பாட்டு நிலைகள் கொண்டு அது, சங்க இலக்கியங்களை அடுத்துத் தோன்றியது என்று பொதுவாகக் கூறலாம்.
திருக்குறள் உரை
திருக்குறளுக்கு பலபேர் உரை இயற்றி இருந்தாலும் பரிமேலழகர் உரையே பெரியோர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது.
திருக்குறளின் சிறப்பு
திருக்குறளின் வாழ்வியல் நெறிகள் எக்காலத்திற்கும் ஏற்புடையதாய் அமைந்திருக்கும். திருக்குறள் உலகமொழிகள் பலவற்றுள் மொழிபெயர்கப்பட்டுள்ளது. திருக்குறள் மனிதனின் அகவாழ்வும், புறவாழ்வும், எவ்வாறு வாழவேண்டும் என்பதற்க்கு சிறந்த வழிகாட்டியாய் திகழும்இத்தகைய திருக்குறளின் சிறப்பை மேம்படுத்த edubilla.com கையாண்ட சிறு முயற்சி இதுவாகும். தினம் ஒரு திருக்குறள் பயின்று செம்மையாய் வாழ வாழ்த்துக்கள்.